Xiaomi நிறுவனம் 100W சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி தவிர விவோ நிறுவனம் ஏற்கனவே 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.
இத்தனை திறன் கொண்ட தொழில்நுட்பத்தை ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile