Vivo Y35 குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 680 SoC உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Vivo இன்று இந்தியாவில் ஒரு புதிய மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது

விவோ Y35 ஸ்மார்ட்போன் அகேட் பிளாக் மற்றும் டான் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். இத்துடன் ரூ. 750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Vivo இன்று இந்தியாவில் ஒரு புதிய மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo Y35 என அழைக்கப்படும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் Vivo Y71, Vivo Y83 மற்றும் Vivo Y53 உள்ளிட்ட பிற Y-தொடர் ஸ்மார்ட்போன்களுடன் இணைகிறது. இது Realme 9 5G, Xiaomi Redmi Note 11 Pro மற்றும் Vivo T1 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடப் போகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விவோ Y35 ஸ்மார்ட்போன் அகேட் பிளாக் மற்றும் டான் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். இத்துடன் ரூ. 750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Vivo Y35 சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், 16MP செல்பி கேமரா, வி வடிவ நாட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பக்கவாட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 5000 எம்ஏஹெசத் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 70 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 34 நிமிடங்களே ஆகும்.Vivo Y35 4G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 12 ஐக் கொண்டுள்ளது. போனின் மொத்த எடை 188 கிராம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :