குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய Vivo

HIGHLIGHTS

Vivo தனது புதிய ஸ்மார்ட்போனான Vivo Y15s ஐ இந்தியாவில் Y தொடரின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo Y15s இல் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Vivo Y15s கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய Vivo

Vivo தனது புதிய ஸ்மார்ட்போனான Vivo Y15s ஐ இந்தியாவில் Y தொடரின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo Y15s இல் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த ஃபோனில் 13 மெகாபிக்சல் AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போன் இரண்டு வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Vivo Y15s கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y15s விலை தகவல்.

இதன் 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை விவோ இந்தியா இ-ஸ்டோரில்  வாங்கலாம்.

விவோ ஒய்15எஸ் போன் சிறப்பம்சம் 

இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டிருக்கும். மேலும் ஃபன்டச் ஓ.எஸ் 11.1-ஐ கொண்டிருக்கும். இந்த போனில் 6.5 இன்ச் ஹெச்.டி+ (720×1,600 பிக்ஸல்கள்) 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, octa-core MediaTek Helio P35 SoC பிராசஸர், ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 2 பின்பக்க கேமராக்களை கொண்டுள்ள இந்த போனில், f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சாரும், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் சென்சாரும் இடம்பெற்றுள்ளன. மேலும் 8 எம்.பி செல்ஃபி கேமரா f/2.0 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும், 10W சார்ஜிங் வசதியும் தரப்பட்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile