DSLR போன்ற கேமரா கொண்ட Vivo யின் இந்த மாடலை ஒரே அடியாக ரூ,22,000 டிஸ்கவுண்ட்
நீங்கள் ஒரு DSLR கேமரா போன்ற போனை தேடிகொண்டிருந்தால் அதாவது DSLR கேமராவில் எடுக்கும் போட்டோவை குவாலிட்டி தரும் போன் தேடினால் அவர்களுக்கு பெஸ்ட் விவோவின் இந்த லேட்டஸ்ட் Vivo X300 Ultra போன் ஆகும், ஏன் என்றால் இந்த போன் பவர்புல் கேமரா சிஸ்டத்துடன் வரும் இந்த போனை கம்மி விலையில் வாங்க வாய்ப்பு பெறலாம்.
SurveyVivo X300 Ultra ஆபர் விலை தகவல்
Vivo X300 Ultra விலை ரூ,1,59,999 ஆகும். இது 16GB ரேம் மற்றும் 512GB ரேம் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கும். இது எக்லிப்ஸ் பிளாக் மற்றும் விக்டரி கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கும். SBI மற்றும் Axis பேங்க் கார்ட்கள் மற்றும் UPI மூலம் ₹16,000 வரை இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் உள்ளிட்ட சலுகைகள் இதில் அடங்கும்.

இந்நிறுவனம், போட்டோகிராஃபர் கிட் உடன் Vivo X300 Ultra மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிட் உடனான மாடலின் விலை ரூ,209,999 ஆகும். இந்நிறுவனம், யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும்போது ரூ,21,000 வரையிலும், எஸ்பிஐ (SBI) கார்டுகள் மூலம் ₹22,000 வரையிலும் இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.

இதை இன்றிலிருந்து விவோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் , ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.
Vivo X300 Ultra கேமரா சிறப்பு
Vivo X300 Ultra, Zeiss மாஸ்டர் லென்சஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 200MP உயர் தெளிவுத்திறன் கொண்ட முதன்மை கேமரா மற்றும் 200MP APO டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கும்.
இந்த ஃபோன் 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 105x வரையிலான டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் , தொலைவில் உள்ள பொருட்களைக் கூட மிகத் துல்லியமாகப் படம்பிடிக்க முடிகிறது. இந்த மாடல், 200mm மற்றும் 400mm குவிய நீளங்களைக் கொண்ட வெளிப்புற Zeiss டெலிஃபோட்டோ லென்ஸ்களையும் ஆதரிக்கிறது. கேமரா கிரிப், கூடுதல் பேட்டரி மற்றும் பிற துணைக்கருவிகளை உள்ளடக்கிய, இதனுடன் வரும் போட்டோகிராஃபர் கிட், பயனர்களுக்கு ஏறக்குறைய ஒரு தொழில்முறை கேமரா போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
Vivo X300 Ultra சிறப்பம்சம்.
Vivo X300 Ultra போனில் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.82-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். மேலும், உள்ளே, விவோ X300 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும். இந்த போனில் விவோவின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 அடிப்டையில் இயங்கும்.
இதையும் படிங்க:புத்தகத்தை போல மடித்து வைக்க கூடிய Motorola யின் புதிய போல்டபில் போன் அறிமுகம்
இதன் கேமரா அம்சங்களை பற்றி பேசினால், Vivo X300 Ultra போனில் இதில் மெயின் ப்ரைமரி கேமரா 200MP சென்சார், 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா உடன் வருகிறது மேலும் இந்த போனில் ZEISS கேமரா ப்ரேண்டிங் பெயர் இருப்பதை இதனுடன் இந்த போனில் அட்வான்ஸ்ட் அம்சங்களுடன் 4K வீடியோ ரெக்கார்டிங் எடுக்க முடியும் Dolby Vision. உடன் தெளிவான ஸ்க்ரீன் வழங்க முடியும் இதனுடன் இந்த போனில் செல்பிக்கு 50MP முன் கேமரா கொண்டுள்ளது
கடைசியாக இந்த போனின் பேட்டரியை பற்றி பேசினால் 6,600mAh பேட்டரி உடன் 100W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile