விவோவின் புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 9 இந்தியாவில் அறிமுகமாகும்.

விவோவின்  புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 9 இந்தியாவில் அறிமுகமாகும்.
HIGHLIGHTS

விவோ நிறுவனத்தின் V17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

இதில் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் V17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

Vivo V17  சிறப்பம்சங்கள்:

– 6.38 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4500 Mah . பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் விவோ V17 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ V17 ரஷ்ய மாடலில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340×1080 பிக்சல் சூப்பர் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

Vivo  V17 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo