இரண்டு செல்பி கேமரா கொண்ட Vivo S9 5G ஸ்மார்ட்போன் மார்ச் 3 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Vivo S9 5 ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும்

Vivo S9 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

புதிய Vivo S9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

இரண்டு செல்பி கேமரா கொண்ட  Vivo S9 5G ஸ்மார்ட்போன் மார்ச் 3 அறிமுகமாகும்.

விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் மாடலாக இருக்கும். 
 
புதிய விவோ எஸ்9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்படலாம். மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்படும் பட்சத்தில், இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இவைதவிர 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் விவோ எஸ்9 அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எஸ்9 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile