iPhone 13 வாங்குவோருக்கு அதிரடியான Vi யின் கேஷ்பேக் Offer.

HIGHLIGHTS

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது

முதல் நாளில் ஐபோனைப் பெறுவீர்கள்.

சந்தாதாரர்களுக்கும் கேஷ்பேக் உள்ளது.

நீங்கள் சமீபத்திய ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டால், நெட்வொர்க் வழங்குநர் நிறுவனமான வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது. வோடபோன் ஐடியா ஐபோன் 13 வாங்குபவர்களுக்கு ப்ரீ ஆர்டர் சலுகைகளை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஐபோன் 13 ஐ ஆர்டர் செய்தால், அது கிடைக்கும் முதல் நாளில் ஐபோனைப் பெறுவீர்கள். நீங்கள் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனராக இருந்தால் நன்மைகளைப் பெறலாம், ஏனெனில் ரெட்எக்ஸ் சந்தாதாரர்களுக்கும் கேஷ்பேக் உள்ளது. ஒப்பந்தம் எவ்வாறு செயல்படும் என்பதை இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளை செப்டம்பர் 18, 2021 முதல் myvi.com, Vi ஆப் மற்றும் 270க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்பட்ட மாடல்கள் வருகிற செப்டம்பர் 25, 2021 முதல் ஷிப்பிங் செய்யப்படும்.

ஐபோன் 13 சீரிஸ் வாங்கினால் என்னென்ன வோடபோன் ஐடியா (Vi) சலுகைகள் கிடைக்கும்?

– Vi வழியாக ஐபோன் 13 சீரிஸை ப்ரீ ஆர்டர் செய்தால், ஆப்பிள் வழியாக இந்தியாவில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வாங்க கிடைக்கும் அதே "முதல்" நாளில் நீங்களும் உங்களுக்கான புதிய ஐபோன் 13 மாடலை பெறலாம்.

– Redx1099, Redx Family 1699 மற்றும் Redx Family 2299 போன்ற REDX போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் தனித்துவமான கேஷ்பேக் நன்மைகளும் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

உதாரணமாக, நீங்கள் Redx1099, Redx Family 1699, Redx Family 2299 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், முதல் மாத வாடகை தொகையில் 100% கேஷ்பேக் பெறலாம். இந்த கேஷ்பேக் பில் தள்ளுபடியாக ஆறு மாதங்களுக்குப் பிரிக்கப்படும்.

– கூடுதலாக, நீங்கள் Redx திட்டங்களில் அணுக கிடைக்கும் சில premium entertainment நன்மைகளையும் நீங்கள் பெறலாம். அதாவது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், விமான நிலைய லவுஞ்ச் அணுகல் மற்றும் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான complimentary இன்டர்நேஷனல் ரோமிங் போன்ற நன்மைகளை அனுபவிக்கலாம்.

– உடன் ஐபோன் 13 சீரிஸை வாங்கும் வி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.299 உடன் ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு டபுள் டேட்டா நன்மை அணுக கிடைக்கும். மேலும், வீக் எண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையும் இருக்கும்.

புதிய ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸின் இந்திய விலை விவரங்கள்:

ஆப்பிள் ஐபோன் 13 மினி மாடலின் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை முறையே ரூ.69,900, ரூ.79,900 மற்றும் ரூ.99,900 ஆகும்.

அடுத்ததக உள்ள வெண்ணிலா ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.79,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.89,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.109,900 க்கும் வாங்க கிடைக்கும்.

ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்ட ஐபோன் 13 ப்ரோ மாடல் முறையே ரூ.1,19,900, ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு வாங்க கிடைக்கும்

இந்த சீரீஸில் மிகவும் ஹை எண்ட் மாடலான ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வகைகள் முறையே ரூ.1,29,900, ரூ.1,39,900, ரூ.1,59,900 மற்றும் ரூ.1,79,900 க்கு வாங்க கிடைக்கும்..

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :