உலகின் மிக சிறிய 3 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்.

உலகின்  மிக சிறிய 3 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்.
HIGHLIGHTS

உலகின் மிகச்சிறிய 4 ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதில் பெயர் பெற்ற Unihertz

. முதல் மாடல் 2.45 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

Jelly 2 சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

உலகின் மிகச்சிறிய 4 ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதில் பெயர் பெற்ற Unihertz  நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்Jelly 2  ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த போனையும் அதன் அளவு காரணமாக பேச்சில் உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இல் பணிபுரியும் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போன் இது என்று கூறப்படுகிறது. இந்த போன் 3 இன்ச் டிஸ்பிளே மட்டுமே உள்ளது. இது நிறுவனத்தின் முதல் போன் ஜெல்லியின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். முதல் மாடல் 2.45 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பழைய போனில் ஏற்பட்ட குறைபாடுகளை சமாளிக்க, நிறுவனம் இப்போது ஜெல்லி 2 ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளது.

 Jelly 2 சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

இந்த முறை நிறுவனம் ஏற்கனவே பெரிய ஸ்க்ரீன் , இரண்டு மடங்கு பேட்டரி ஆயுள், மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் ஜி.பி.எஸ் சென்சார் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த முறை நிறுவனம் போனை கிரெடிட் கார்டின் அளவாக மாற்றியுள்ளது. போனில் 3 இன்ச் டிஸ்பிளே உள்ளது, இது 480 × 384 ரெஸலுசன் கொண்டது. ஸ்க்ரீன் அளவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், போனின் டைப் செய்வது இன்னும் கொஞ்சம் கடினமாக இருக்கும்.

போனின் டிஸ்பிளே சிறியதாக இருக்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது, ஆனால் அதன் சிறந்த தரம் காரணமாக, திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுக்கு மீடியா டெக் ஹீலியோ பி 60 ப்ரோசெசர் கிடைக்கிறது. இது ஒரு மிட் ரேன்ஜ் சிப்செட். போனில் 2000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது போனின் சிறிய அளவு காரணமாக போதுமானதாக தெரிகிறது.

கேமரா  மற்றும் பிங்கர்ப்ரின்ட்  சென்சார்.

இந்த சிறிய போனில் , நிறுவனம் முன் மற்றும் பின்புற கேமராக்களை வழங்கியுள்ளது. செல்பிக்கு, இது 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பாதுகாப்பை மனதில் வைத்து, பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. போனின் சுமார் 16.5 mm இருக்கும். இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. நிறுவனம் போனின் விலை 9 129 (சுமார் ரூ .9,600). ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo