13200mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5 நாட்கள் வரை சார்ஜ் செய்ய தேவை இல்லை.

13200mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5 நாட்கள் வரை சார்ஜ் செய்ய தேவை இல்லை.
HIGHLIGHTS

Ulephone Power Armor இது உலகின் மிகப்பெரிய பேட்டரி கொடுக்கப்பட்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும்

Ulephone Power Armor 13200mAh பேட்டரி உள்ளது.

Energizer Power Max P18K என்பது உலகின் முதல் பேட்டரி அதாவது 18000mAh பேட்டரி கொடுக்கப்பட்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

Ulephone Power Armor இது உலகின் மிகப்பெரிய பேட்டரி கொடுக்கப்பட்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். வழக்கமாக ஒரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 7000mAh பேட்டரி திறன் இருக்கும், ஆனால் Ulephone Power Armor 13200mAh பேட்டரி உள்ளது. அதன் பேக்கப் 5 நாட்களுக்கு வரை நீடிக்கும். யூலிபோன் பவர் ஆர்மரின் பேட்டரி 600 மணிநேர காத்திருப்பு உள்ளது. Energizer Power Max P18K என்பது உலகின் முதல் பேட்டரி அதாவது 18000mAh பேட்டரி  கொடுக்கப்பட்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் 

Ulefone Power Armor 13 யின் சிறப்பம்சம் 

Ulefone Power Armor 13 யில் 6.81 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 1080×2400 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டது. ஆண்ட்ராய்டு 11 போனில் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் வடிவமைப்பு முரட்டுத்தனமாக உள்ளது. உருவாக்க தரம் மற்றும் நீர்ப்புகாவுக்காக இது IP68/IP69K ரேட்டிங்கை பெற்றுள்ளது. போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 ப்ரோசெசர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

Ulefone Power Armor 13 யின் கேமரா 

போனில் நான்கு பின்புற கேமராக்கள் உள்ளன, இதில் பிரைமரி  லென்ஸ் 48 மெகாபிக்சல்கள் ஆகும். இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல் வைட் என்கில், மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் நான்காவது லென்ஸ் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போனின் விலை $ 299.99 அதாவது சுமார் ரூ. 22,311. போன் ஆகஸ்ட் 2 முதல் AliExpress மற்றும் Banggood மூலம் விற்பனைக்கு வரும்.

Ulefone Power Armor 13 யின் விலை 

ஆகஸ்ட் 2 க்குப் பிறகு, போனின் விலை $ 499.99 அதாவது சுமார் ரூ .37,187 ஆக இருக்கும். போனுடன் 15W வயர்லெஸ் சார்ஜரும் கிடைக்கிறது. இது தவிர, ஐஆர் பிளாஸ்டர், NFC , ஃபேஸ் அன்லாக், பிங்கர்ப்ரின்ட் சென்சார், டூயல் சிம் சப்போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo