டெக்னோ தனது புதிய மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 8 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8 இந்திய சந்தையில் 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TECNO Spark 8 இல் ஒரு பெரிய 5000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன்களான ரியல்மி சி சீரிஸ் மற்றும் ரெட்மி 9 ஏ ஆகியவற்றுடன் போட்டியிடும்.
6.52 இன்ச் அளவிலான HD+டாட்-நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த லேட்டஸ்ட் டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது மென்மையான செயல்பாட்டிற்கு 120 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட்டை வழங்குகிறது. மேலும் 88.6 சதவிகித ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 269 பிபிஐ ஸ்கிரீன் பிக்சல் டென்சிட்டி மற்றும் 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஸ்க்ரீன் போன்றவைகள் இதன் டிஸ்பிளேவை இன்னும் சிறந்ததாக ஆக்குகிறது.
செல்பீ பிரியர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் 8MP கேமராவை – இன்னும் பிரகாசமான மற்றும் தெளிவான செல்பீக்களைக் கிளிக் செய்ய – டூயல் ஃபிளாஷ் உடன் பேக் செய்கிறது. இதன் பிளாஷ் குறைந்த வெளிச்சத்தில் கூட வீடியோ அழைப்புகளைச் செய்யவும் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஒட்டுமொத்த வடிவமைப்பை பொறுத்தவரை, ஸ்பார்க் 8 மாடல் பார்பதற்கு மெல்லிய பாடி ஃப்ரேம், பெரிய பேட்டரி கவர் டிசைன் மற்றும் ரியர் கேமரா ஃப்ரேம் ஆகியவற்றுடன் ஒரு தனித்துவமான உணர்வை அளிக்கிறது என்றே கூறலாம்.
இதன் விலை ரூ.7999 ஆகும் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் சில்லறை விற்பனை கடைகளில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும். அவைகள் – அட்லாண்டிக் ப்ளூ, டர்க்கைஸ் க்ளன மற்றும் ஐரிஸ் பர்பிள் ஆகும்.
ஒட்டுமொத்தமாக ஸ்பார்க் 8 மாடல் ஆனது இந்தியாவி உள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது, மற்றும் அவர்களின் அன்றாடத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்படியான அம்சங்களை கொண்டுள்ளது.