Tecno Pova 7 Series Price
Tecno இந்திய சந்தையில் அதன் Tecno POVA 7 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் Tecno POVA 7, Tecno POVA 7 Pro ஆகியவை அடங்கும். இந்த இரண்டு போன்களும் AI அம்சங்கள் கொண்டிருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
டெக்னோ POVA 7 இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.12,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,999. இந்த போன் மேஜிக் சில்வர், ஓயாசிஸ் கிரீன் மற்றும் கீக் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது. அதே நேரத்தில், POVA 7 Pro இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.16,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999. இந்த போன் டைனமிக் கிரே, நியான் சியான் மற்றும் கீக் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் .
டிஸ்ப்ளே:-டெக்னோ POVA 7 ப்ரோ 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது அல்ட்ரா-ஸ்மூத் 144Hz ரெப்ராஸ் ரேட் வீதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், POVA 7 6.78-இன்ச் FHD + LTPS IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது அல்ட்ரா-ஸ்மூத் 144Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது.
ப்ரோசெசர்:-TECNO Pova 7 5G மற்றும் TECNO Pova 7 Pro 5G இரண்டு போனிலும் MediaTek Dimensity 7300 Ultimate சிப்செட் 4nm ப்ரோசெசரின் கீழ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் HiOS 15 உடன் இனைந்து வேலை செய்கிறது.
ரேம் ஸ்டோரேஜ் :TECNO Pova 7 சீரிஸ் இந்த இரண்டு போனிலும் யில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Oppo Reno 14 சீரிஸ் யின் புதிய போன் 6200Mah பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
கேமரா :-கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், POVA 7 ப்ரோவின் பின்புறம் 64-மெகாபிக்சல் சோனி IMX682 ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் இரண்டாவது கேமரா உள்ளது, இது vlog மோட் மற்றும் இரட்டை வீடியோ செயல்பாட்டை சப்போர்ட் செய்கிறது, இது க்ரிஎட்டர்களுக்கு சிறந்தது. POVA 7 50-மெகாபிக்சல் AI கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான 13MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி :-இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது , அதே நேரத்தில் POVA 7 ப்ரோ 30W வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.