புதிய மாடல் புளூம் என்ற கோட் பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் W20 5G இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும். சாம்சங் நிறுவனத்தின் டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை சீனா டெலிகாம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
சாம்சங் நிறுவனத்தின் முந்தைய W சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ 2019 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். W20 5ஜி மாடல் புதிய டிசைனை கொண்டிருக்கிறது
புதிய மாடல் புளூம் என்ற கோட் பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் உருவான மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனமும் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile