Samsung W22 5G போனில் Google சேவைகள் இல்லாமல் அறிமுகமாகியுள்ளது

HIGHLIGHTS

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி, கேலக்ஸி இசட் ஃபோல்டின் கஸ்டம் எடிஷனாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஸ்மார்ட்போனில் கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் ‘கேலக்ஸி’ பிராண்டிங் கிடையாது.

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி, கேலக்ஸி இசட் ஃபோல்டின் கஸ்டம் எடிஷனாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போனின் "வாரிசான" இந்த புதிய சாம்சங் போன் எஸ் பென் ஆதரவுடன் தொகுக்கப்பட்டு, குறிப்பாக சீன சந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் W22 5G ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை:

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஸ்மார்ட்போனின் வன்பொருள் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3-க்கு ஒத்ததாக இருந்தாலும், இது ஒரு தனித்துவமான தீம்ஸ் மற்றும் வால்பேப்பர்கள் மற்றும் பிளாக் கோல்ட் வண்ண விருப்பத்தின் கீழ் சற்று வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது, உடன் சில மென்பொருள்-நிலை மாற்றங்களையும் பெற்றுள்ளது.

சாம்சங் W22 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

– முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஆனது கேலக்ஸி இசட் போல்ட் உடன் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது.

– 7.6 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED QXGA+ டிஸ்ப்ளே
– 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே HD+ டிஸ்பிளே
– எஸ் பென் ஆதரவு
– ஆக்டா கோர் SoC ப்ராசஸர்
– 16 ஜிபி ரேம்
– 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 12 மெகாபிக்சல் மெயின் சென்சார்
– ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு
– கவரின் மேல் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– 4 மெகாபிக்சல் அண்டர்-டிஸ்ப்ளே செல்பீ கேமரா
– 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.2, என்எப்சி
– அல்ட்ரா வைட்பேண்ட் (யுடபிள்யூபி)
– யூஎஸ்பி டைப்-சி போர்ட்
– பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
– 4,400mAh பேட்டரி
– அளவீட்டில் மடிக்கும்போது 158.2×67.1×16 மிமீ

– விரிவடையும் போது 158.2×128.1×6.4 மிமீ
– எடையில் 288 கிராம்.

குறிப்பிடத்தக்க வண்ணம், சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஸ்மார்ட்போனில் கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் ‘கேலக்ஸி’ பிராண்டிங் கிடையாது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :