Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் 48MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் 10,499விலையில் அறிமுகம்.
புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனான Samsung Galaxy A03 போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung Galaxy A03 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது
Samsung Galaxy A03 ஆனது octa-core செயலியைக் கொண்டுள்ளது.
'சாம்சங் இந்தியா தனது புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனான Samsung Galaxy A03 போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung Galaxy A03 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. Samsung Galaxy A03 ஆனது இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Samsung Galaxy A03 ஆனது octa-core செயலியைக் கொண்டுள்ளது. போனில் டால்பி ஆட்டம்ஸ் ஸ்பீக்கரும் உள்ளது. Samsung Galaxy A03 ஆனது இந்திய சந்தையில் Motorola Moto E40, Realme C25Y மற்றும் Tecno Spark 8C ஆகியவற்றுடன் போட்டியிடப் போகிறது.
SurveySamsung Galaxy A03 சிறப்பம்சம்.
இந்த போனில் Unisoc T606 octa-core chipset வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6.5-inch HD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ.கோர் 3.1 ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கேமராவை பொறுத்தவரை இரண்டு பின்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் டெப்த் சென்சார் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது
இதில் உள்ள ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் கேமரா செல்ஃபிக்கள் எடுக்கும்போது தானாக வைட் ஆங்கிளுக்கு மாறும் தன்மையை கொண்டுள்ளது.இந்த போனில் 5000mAh பேட்டரி தரப்பட்டுள்ளது.
Samsung Galaxy A03 விலை தகவல்.
இந்த போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,499-ஆகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
