சாம்சங்கின் புதிய Galaxy z Fold சிறப்பம்சங்கள் இன்டர்நெட்டில் லீக்

HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது

கேலக்ஸி இசட் போல்டு 3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், எஸ் பென் வசதி வழங்கப்படலாம்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடல் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேலக்ஸி இசட் போல்டு 3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆர்மர் பிரேம் டைட்டானியம் அல்லது கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரு பொருட்களும் அலுமினியம் மற்றும் ஸ்டீலை விட எடை குறைவாக இருப்பவை ஆகும். மற்ற அம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், எஸ் பென் வசதி வழங்கப்படலாம். 

அதன்படி புதிய இசட் போல்டு 3 முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 5.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. முந்தைய மாடலில் 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் சப்போர்ட் வழங்குவதற்கு தேவையான பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ் பென் வழங்கப்படுவதால், புது கேலக்ஸி நோட் பேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :