ட்விட்டரில் கேலக்ஸி S9 – வெளியீட்டிற்கு முன் லீக் ஆன சிறப்பம்சங்கள்

ட்விட்டரில் கேலக்ஸி S9 – வெளியீட்டிற்கு முன் லீக் ஆன சிறப்பம்சங்கள்
HIGHLIGHTS

சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. 

முன்னதாக ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் பெரும்பாலான சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ரய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் முந்தைய கேலக்ஸி எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 12MB டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுவதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டோக்கள்  எடுக்க 12 MB பிரைமரி கேமராவில் f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 12 எம்பி இரண்டாவது கேமராவுடன் f/2.4 அப்ரேச்சர், 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் f/1.7 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஒற்றை பிரைமரி கேமரா 12 எம்பி சென்சார், f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. இவ்வகை அப்ரேச்சர் வீடியோக்களை (960 fps) நொடிக்கு 960 ஃபிரேம் வேகத்தில் பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். 

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி பிளஸ் 1440×2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 1440×2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்-இன் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படுகிறது.

இத்துடன் 4 GB ரேம், 64 GB இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 GB இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் IP68 சான்று, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஐரிஸ் ஸ்கேனர், முக அங்கீகார வசதி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு.எஸ்.பி டைப்-சி, எல்டிஇ, ப்ளூடூத் 5.0, டூயல் சிம் ஸ்லாட், டூயல் பேண்ட் வைபை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனில் 3000 mah பேட்டரி மற்றும் s9 plus ஸ்மார்ட்போனில் 3500 mah. பேட்டரி மூலம் சக்தகியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, லிலாக் பர்ப்பிள் மற்றும் கோரல் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்9 சீரிஸ் முன்பதிவுகள் அறிமுக நிகழ்வில் துவங்கி மார்ச் 8-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எஸ்9 சீரிஸ் விலையை பொருத்த வரை எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை முந்தைய எஸ்8 சீரிஸ்-ஐ விட 100 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo