Samsung Galaxy S27 Ultra தகவல் லீக் டம்மி யூனிட் கேமரா, டிசைன் அனைத்தும் வெளுச்சத்துக்கு வந்தது
Samsung அதன் புதிய Samsung Galaxy S27 Ultra ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும்
இந்த சீரிஸின் கீழ் Galaxy S27, Galaxy S27+ மற்றும் Galaxy S27 Pro போனும் அறிமுகம் செய்யும்
Samsung அதன் புதிய Samsung Galaxy S27 Ultra ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும். இந்த சீரிஸின் கீழ் Galaxy S27, Galaxy S27+ மற்றும் Galaxy S27 Pro போனும் அறிமுகம் செய்யும். இப்பொழுது இந்த Galaxy S27 Ultra போனின் கேமரா மற்றும் டைமென்ஷன் போன்ற பல தகவல் லீக் ஆகியுள்ளது. இந்த ஃபோனில் 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என கூறப்படுகிறது
Samsung Galaxy S27 Ultra கேமரா மற்றும் லீக் தகவல்
Android Headlines அறிக்கையின் படி லீக் தகவலின் படி இது CAD டிசைனின் அடிபடையின் கீழ் இந்த போனின் டம்மி மாடல் என்பது தெரிய வந்துள்ளது.. Galaxy S27 Ultra யின் பின் கேமரா செட்டப் முழுமையாக புதிய வடிவில் கொடுக்கப்படும். மேலும் இந்த போனில் இம்முமுறை கேமராவை பேனலுக்கு மேலே வைக்கப்படும் இதனுடன் இந்த போனில் வயர்லெஸ் சார்ஜிங் பேட்டரி பேக்கப்புக்கு மேக்னேட்டிக் அம்சம் வழங்கப்படுகிறது.
Samsung Galaxy S27 Ultra போனை 2027 ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படும், ஆனால் அதற்க்கு முன்னராகவே இந்த போனின் பல தகவல் வெளியாகியுள்ளது
Galaxy S27 Ultra லீக் அம்சம்.
லீக் மாடளின்படி சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ரா 163.76 x 78.25 x 7.97 மிமீ அளவைக் கொண்டிருக்கக்கூடும். ஒப்பிடுகையில், கேலக்ஸி S26 அல்ட்ரா 163.6 x 78.1 x 7.9 மிமீ அளவைக் கொண்டுள்ளது. இது, புதிய மாடல் அதன் முந்தைய மாடலை விட சற்றே பெரியதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இந்த ஃபோனில் S பென் ஸ்லாட் தக்கவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது நிறுவனம் ஸ்டைலஸ் ஆதரவைத் தொடரக்கூடும்.
சாம்மொபைல் (SamMobile) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சாம்சங் நிறுவனம் Galaxy S27 ப்ரோ மற்றும் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடல்களுக்காக அப்டேட் செய்யப்பட்ட ப்ரைவசி காட்சித் தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் ஈடுபட்டுள்ளது. கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவில், பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது ஸ்க்ரீனில் வெளுச்சதை குறைக்கும் தொழில்நுட்பம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. இது, போனில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களின் பார்வையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
வரவிருக்கும் மாடல்களில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் அப்டேட் செய்யப்படலாம். குறிப்பாக, புதிய பிரைவசி டிஸ்ப்ளே அப்டேட் செய்யப்பட ப்ரைட்னஸ் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, பயனர்கள் தங்கள் ப்ரைவசியை பேணிக்காக்கும் அதே வேளையில், ப்ரைட்னஸ் வெளிச்சத்தில் ஸ்க்ரீனை பார்ப்பதை எளிதாக்கும். இருப்பினும், கேலக்ஸி S27 மற்றும் கேலக்ஸி S27+ ஆகியவற்றின் வழக்கமான மாடல்களில் இந்த அம்சம் இடம்பெற வாய்ப்பில்லை.
Galaxy S27 Ultra கேமரா அம்சங்கள்
லீக் தகவல்களின்படி, கேலக்ஸி எஸ்27 அல்ட்ராவில் 200MP ப்ரைமரி கேமரா இடம்பெறக்கூடும். கூடுதலாக, இந்த ஃபோனில் 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். இந்த முறை சாம்சங் தற்போதுள்ள 3x டெலிஃபோட்டோ கேமராவை கைவிடக்கூடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது கேலக்ஸி எஸ்27 அல்ட்ராவில் 5,534mAh பேட்டரி கொண்டிருக்கும்.