Samsung Galaxy S24
நேற்று Samsung அதன் Galaxy Unpacked 2026 நிகழ்வில் Samsung Galaxy S26 சீரிஸ் அறிமுகம் செய்தது , அதனை தொடர்ந்து அதன் கடந்த Samsung Galaxy S24 போனில் அதன் MRP விலையை விட ரூ,33,505 குறைக்கப்பட்டுள்ளது இதன் MRP விலை ரூ,74,999 ஆகும் அதாவது அமேசானில் இந்த போனை வெறும் ரூ,41,494 யில் வாங்கலாம் அதாவது இந்த போனை பிளிப்கார்டுடன் ஒப்பிடும்போது சுமார் ரூ,8000 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
Samsung Galaxy S24 அமேசானில் ரூ,42,994க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு ரூ,41,494 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த போனில் நோ கோஸ்ட் EMI கேஷ்பேக் போன்ற நன்மையை பெறலாம் மேலும் இதன் MRP விலையோ ரூ,74,999 ஆகும் அதிலிருந்து ரூ,33,505 விலை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
இதே போனை நீங்கள் ப்ளிப்கார்டில் பார்த்தல் Samsung Galaxy S24 ப்ளிப்கார்டில் ரூ,49,999 வைக்கப்பட்டுள்ளது மேலும் பிளிப்கார்டுடன் ஒப்பிடும்போது சுமார் 8000ரூபாய் அதிகமாக இருக்கிறது
இதையும் படிங்க:200MP மெயின் கேமரா உடன் Samsung Galaxy S26 Ultra அறிமுகம் இம்முறை சிறப்பான சம்பவம் இருக்கு
Samsung Galaxy S24 5G ஆனது 1Hz-120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.2-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது. கனேக்ஷனிர்க்கு , இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. Galaxy S24 5G 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
இந்த ஃபோன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. டைமன்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 147 mm, அகலம் 70.6 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 167 கிராம். கேமரா செட்டிங் பார்க்கும்போது, கேலக்ஸி S24 5Gயின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 அப்ரட்ஜர் உடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 டீலெப்போ கேமராவைக் கொண்டுள்ளது வழங்கப்படுகிறது.