Samsung Galaxy Note 10 ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்.

HIGHLIGHTS

Samsung Galaxy Note 10 ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல்  எடிசன்  அறிமுகம்.

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் ஹாலிவுட் திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

சாம்சங் மற்றும் லுகாஸ்ஃபிலிம் நிறுவனங்களிடையே கையெழுத்தான வியாபார ரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டார் வார்ஸ் தீம் கொண்ட வால்பேப்பர், ஷட்-டவுன் அனிமேஷன், ஐகான் மற்றும் சிறப்பு சத்தங்கள் இடம்பெற்றிருக்கிறது

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை தழுவிய வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் டேட்டாக்கள் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் சாதனத்துடன் பிரத்யேக கேஸ், மெட்டல் பேட்ஜ், எஸ் பென் மற்றும் கேலக்ஸி பட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 1,299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 93,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile