Samsung Galaxy M52 5G Launch Date in India:கைபேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 52 5 ஜி யை விரைவில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்திய அமேசான் டீஸர் கேலக்ஸி எம் 52 5 ஜி செப்டம்பர் 19 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளிப்படுத்தியது. இந்த போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 51 க்கு மேம்படுத்தப்படும்.
புதிய எம் சீரிஸ் ல்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கிறது. டிஸ்பிளே : ஃபோன் 6.7 இன்ச் ஃபுல்-எச்டி + (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித ஆதரவைப் பெறலாம்.
புதிய கேலக்ஸி எம்52 5ஜி மாடல் முந்தைய எம்51 மாடலை விட 21 சதவீதம் மெல்லியதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் என தெரிகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங் பே, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.