சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது.
5 ஜி வேரியண்ட்டில் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்படும் மற்றும் சாதனத்தின் பிரத்யேக பக்கம் அமேசான் இந்தியாவில் காணப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி (சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி) குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறும் மற்றும் தொலைபேசியின் முன்புறத்தில் ஒரு நாட்ச் கொடுக்கப்படும், இதில் செல்ஃபி கேமரா கிடைக்கும்.
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி.+ இன்பினிட்டி வி எல்.சி.டி. ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
– மாலி-G57 MC3 GPU
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 13 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங.