சாம்சங் கேலக்ஸி எம் 22 பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளிவருகின்றன. சமீபத்தில், கேலக்ஸி எம் 22 கசிந்த படங்களிலிருந்து அதன் முக்கிய விவரங்கள் தெரியவந்தது. ஸ்மார்ட்போன் NBTC மற்றும் ப்ளூடூத் SIG சான்றிதழிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது கேலக்ஸி எம் 22 சாம்சங்கின் ரஷ்யா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே இடம்பெற்று இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இதன் இந்திய வெளியீட்டுக்கான அறிவிப்பும் வெளியாகும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 4ஜி ஸ்மார்ட்போனிற்கான சப்போர்ட் பக்கம் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாம்சங் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பட்டியலிடப்பட்டன.
முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எம்22 4ஜி மாடலில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், டூயல் சிம் ஸ்லாட், பல்வேறு எல்.டி.இ. பேண்ட்களுக்கான வசதி, டூயல் பேண்ட் வைபை, என்.எப்.சி., ப்ளூடூத் 5 போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.