விரைவில் வருகிறது சாம்சங் கேலக்ஸி J8

HIGHLIGHTS

இந்தியாவில் ரூ.18,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

விரைவில் வருகிறது சாம்சங் கேலக்ஸி J8

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J8 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி A6 மற்றும் கேலக்ஸி A 6 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தின் போது ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 20-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஸ்மார்ட்போன் விற்பனையை சாம்சங் முன்கூட்டியே துவங்கியது . 

இது குறித்த அறிவிப்பை சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் சிறிய வீடியோவாக பதிவிடப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படத்தின் பின்புறம் இருக்கும் பேக்கிரவுன்ட் பிளர் பயனர் விருப்பப்படி வெவ்வேறு வடிவங்களில் செட் செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.

இத்துடன் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களான போர்டிரெயிட் டால்லி, டூயல் பிரைமரி கேமரா மற்றும் புதிய சூம் எஃபெக்ட் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி J8 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 Mahபேட்டரி

இந்தியாவில் ரூ.18,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஜெ8 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo