Samsung Galaxy Fold அறிமுகமான வந்த சில நாட்களில் அசத்தல் விற்பனை

Updated on 05-Oct-2019

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் துவங்கிய முப்பது நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் இதர தளங்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நடைபெற்றது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

– 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
– 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 12 ஜி.பி. ரேம்
– 512 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 – f/2.4
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
– 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2
– 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2 
– AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் 
– 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
– 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

முன்பதிவு துவங்கிய முப்பது நிமிடங்களில் சாம்சங் மொத்தம் 1200 கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை விற்றதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. 

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கான கேலக்ஸி ஃபோல்டு பிரீமியர் சர்வீஸ் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 12 ஜி.பி. + 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் காஸ்மோஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. 

கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுக்கான பாதுகாப்பு சலுகை ரூ. 10,500 விலையில் வழங்கப்படுகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :