அறிமுகத்திற்க்கு முன்பே Samsung Galaxy A52s யின் தகவல் லீக் ஆனது.

HIGHLIGHTS

Galaxy A52s விலை லீக் வந்து விட்டது

Galaxy A52s ஸ்பெக்ட்ஸ் விவரக்குறிப்புகளுடன் வரும்

மாடல் எண் SM-A528B உடன் Galaxy A52s கீக்பெஞ்சில் காணப்படுகின்றன

அறிமுகத்திற்க்கு முன்பே Samsung Galaxy A52s யின் தகவல் லீக் ஆனது.

சாம்சங் மிக விரைவில் ஒரு புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங்கின் Galaxy A52s விரைவில் வெளிவர போகிறது. இந்த போன் 128GB ஸ்டோரேஜ் மாடலில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மாடலின் விலையும் ஆன்லைனில் வெளி வந்துள்ளது. Samsung Galaxy A52s கீக்பெஞ்சில் காணப்பட்டது, இந்த போன் விவரக்குறிப்புகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் தெரியவில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இது SAMSUNG GALAXY A52S விலையாக இருக்கலாம்

SAMSUNG GALAXY A52S கள் 128GB ஸ்டோரேஜ் மாடலுடன் கொண்டு வரப்படும், இதன் விலை EUR 449 (சுமார் ரூ .39,400). இருப்பினும், டிப்ஸ்டர் போன் ஸ்பெக்ட்ஸ் டிசைன் இதுவரை வெளியிடவில்லை. 91Mobiles உடன்  இணைந்து டிப்ஸ்டர் இஷான் அகர்வால், Samsung Galaxy A52s மிக விரைவில் அறிமுகப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த போன் முதலில் ஐரோப்பிய சந்தையைத் தாக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.

GALAXY A52S இந்த specification உடன்  வரலாம்

Galaxy A52s மாடல் எண் SM-A528B உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 11 இல் வேலை செய்யும். தொலைபேசியில் 8GB ரேம் கொடுக்கப்படும். போனில் இருக்கும் ப்ரோசிஸோர் ‘lahaina' என்ற குறியீட்டு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G ப்ரோசிஸோர் இருக்கலாம் என்று CPU விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலி கேலக்ஸி A52 5Gயில் காணப்படும் ஸ்னாப்டிராகன் 750 SoC ஐ விட மேம்படுத்தப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile