Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

டீசர் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது

Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12 அறிமுகமாகும்.

சாம்சங் வியட்நாம் புதிய கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான வீடியோ டீசரை வெளியிட்டுள்ளது. வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டீசர் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி நோட் 10 சீரிசில் உள்ளதை போன்றே ஸ்மார்ட்போனின் நடுவில் பன்ச் ஹோல் இடம்பெற்றுள்ளது. புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

எனினும், கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் வியட்நாம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் கடந்த ஆண்டுகளில் கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கேமராக்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 Mah . பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பெரும்பாலான கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் குறைந்தபட்சம் எட்டு கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இவற்றில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ51 அறிமுகமாகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile