Samsung Galaxy A34 5G குறைந்த விலை வெர்சன் ரேம் வேரியண்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.

Samsung Galaxy A34 5G குறைந்த விலை வெர்சன் ரேம் வேரியண்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.
HIGHLIGHTS

சாம்சங் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G ஐ அறிமுகப்படுத்தியது

சாம்சங் இப்போது இந்தியாவில் Galaxy A34 5G இன் மிகவும் குறைந்த விலை வெர்சனை கொண்டுவர தயாராகி வருகிறது. ,

சாம்சங் இப்போது கேலக்ஸி ஏ34 5ஜியின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது

சாம்சங் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G ஐ அறிமுகப்படுத்தியது. இரண்டு போன்களும் 128ஜிபி மற்றும் 256ஜிபி வெரிசன் மற்றும் 8ஜிபி ரேம் உடன் வருகின்றன. சாம்சங் இப்போது இந்தியாவில் Galaxy A34 5G இன் மிகவும் குறைந்த விலை வெர்சனை கொண்டுவர தயாராகி வருகிறது. ,

புதிய அறிக்கையின்படி, சாம்சங் இப்போது கேலக்ஸி ஏ34 5ஜியின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. இதன் விலை ரூபாய் 28,999 (சுமார் $350). குறிப்பிட்ட வங்கி அட்டைகளுடன் ரூ. 3,000 உடனடி கேஷ்பேக்குடன் இந்த சாதனம் கிடைக்கும், மேலும் ரூ. 1,000 தள்ளுபடி கூப்பனை Samsung ஷாப் செயலி மூலம் பெறலாம், இதன் விலை ரூ. 24,999 (சுமார் $300) ஆகும்.

Galaxy A34 5G 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ. 30,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டொரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும் இருக்கும். மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் சாதனத்தில் கிடைக்கும், இதனால் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும்.

இந்த சாம்சங் ஃபோன் 6.6 இன்ச் சூப்பர் AMOLED ஸ்க்ரீனை பெறலாம்.,இது 120Hz அப்டேட் வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமரா உள்ளது. தொலைபேசியின் பின்புறத்தில், OIS உடன் 48MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5MP மேக்ரோ கேமரா ஆகியவை கிடைக்கும். முன் மற்றும் பின்புற கேமராக்கள் 4K வீடியோவை 30fps வேகத்தில் பதிவு செய்ய முடியும். இந்த போன் MediaTek Dimensity ப்ரோசெசர் , 5,000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo