மூன்று கேமராக்கள் மற்றும் 4000Mah பேட்டரி உடன் Samsung Galaxy A20S அறிமுகம்.

மூன்று கேமராக்கள் மற்றும் 4000Mah பேட்டரி உடன் Samsung Galaxy A20S  அறிமுகம்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை தகவல் 

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Samsung Galaxy A20S  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1560×720 பிக்சல் HD+ TFT இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.

3டி பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 Mah  பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile