ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்களை சேர்த்துள்ளது

ரிலையன்ஸ்  ஜியோ நிறுவன அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்களை சேர்த்துள்ளது
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்களை சேர்த்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்களை  சேர்த்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து BSNL நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL . நிறுவனங்கள் கூட்டாக 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது .

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL . தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்க்கவில்லை. 

இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம், எம்.டி.என்.எல். நிறுவனம் 8,068 மற்றும் ஆர்.காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

அக்டோபர் 2018 இல் மட்டும் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

செப்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதி வரை இந்திய டெலிபோன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 கோடியில் இருந்து 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo