Redmi Note 8 சீரிஸ் 1 கோடி யூனிடில் விற்பனையில் லாபத்தை எட்டியுள்ளது.

Redmi Note  8 சீரிஸ் 1 கோடி யூனிடில் விற்பனையில் லாபத்தை எட்டியுள்ளது.
HIGHLIGHTS

ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது

சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 13,250) விலையில் விற்பனை செய்கிறது.

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் மாத வாக்கில் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் வெளியானது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது.

புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 13,250) விலையில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை ரூ. 12,999 முதல் துவங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo