நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த 10,000mAh பேட்டரி கொண்ட Redmi Note 17 சீரிஸ் அறிமுகம் விலை என்ன
Redmi யின் புதிய Redmi Note 17 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட
இந்த சீரிஸ் கீழ் Note 17 Pro மற்றும் Note 17 Pro Max ஆகிய போன்கள் அடங்கும்
இந்த இரு போனிலும் சதுர வடிவிலான கேமரா வழங்கப்படுகிறது
Redmi யின் புதிய Redmi Note 17 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸ் கீழ் Note 17 Pro மற்றும் Note 17 Pro Max ஆகிய போன்கள் அடங்கும் . மேலும் இந்த இரு போனிலும் சதுர வடிவிலான கேமரா வழங்கப்படுகிறது மேலும் Redmi Note 17 Pro போனில் 9000Mah பேட்டரி மற்றும் Redmi Note 17 Pro Max 10,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyRedmi Note 17 Pro Max சிறப்பம்சம்.
Redmi Note 17 Pro Max போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.83-iஇன்ச் கொண்ட 1.5K (1,280 x 2,772 பிக்ஸல்) AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 3,500 நித்ஸ் ப்ரைட்னஸ்உடன் இந்த போனில் HDR10+ சப்போர்ட் , Dolby Vision, 100 சதவிகிதம் DCI-P3 c gamut, மற்றும் Wet Touch 2.0.(ஈரமான டச்சிலும் மிக சிறப்பாக வேலை செய்யும்,
இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Redmi Note 17 Pro Max போனில் குவால்கமின் octa-core Snapdragon 6 Gen 5 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 12GB of LPDDR5x RAM, Adreno GPU, மற்றும் 256GB யின் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவை வழங்குகிறது மேலும் இந்த போன Android 16-அடிபடையின் கீழ் HyperOS 3. யில் இயங்குகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் (f/1.5) முதன்மை கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் அடங்கும். இந்த ப்ரோ மேக்ஸ் மாடலில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் (f/2.2) முன்புற கேமராவும் இடம்பெற்றுள்ளது. இந்த ஃபோனால் 4K/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் இதில் 10,000mAh சிலிக்கான் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 6.0 மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட்டையும் ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆக்சிலரோமீட்டர், இ-காம்பஸ், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஃபோனின் டைமென்ஷன் 163.44×78.27×8.57mm மற்றும் இதன் எடை சுமார் 229g ஆகும்.
இதையும் படிங்க நாள் குருசாச்சு புதிய Oppo Find X10 சீரிஸ் மூன்று 200MP கேமரா உடன் அறிமுகமாகும் எப்போ வருது பாருங்க
Redmi Note 17 Pro சிறப்பம்சம்
Redmi Note 17 Pro போனில் நோட் 17 ப்ரோ மேக்ஸில் உள்ள அதே OS, சாப்ட்வேர் சப்போர்ட் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது . இருப்பினும், இந்த ஃபோன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz வரையிலான உச்சபட்ச கிளாக் வேகத்தை வழங்குகிறது. இது ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள அதே பின்புற கேமரா யூனிட்டையும் பெறுகிறது.
இதற்கிடையில், இந்த போனில் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் (f/2.4) செல்ஃபி கேமரா உள்ளது, மேலும் இது 1080p/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது. அதுமட்டுமின்றி, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 9,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Redmi Note 17 Pro, Note 17 Pro Max விலை தகவல்.
Redmi Note 17 Pro விலை இந்தியாவில் 8GB of RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,36,999 .மற்றும் அதன் 8GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,39,999 ஆகும் மேலும் இதன் மறுபக்கம் Redmi Note 17 Pro Max போனின் 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ,49,999 ஆகும் மற்றும் அதன் 12GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,55,999 ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போன செப்டம்பர் 17 அன்று விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனின் அறிமுக சலுகையாக ,SBI, Axis Bank, and IDFC First Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்..
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
