Redmi இந்தியாவில் அதன் Redmi Note 17 5G புதிய போனை அறிமுகம் செய்தது. இந்த போன் சீனாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்கு பிறகு இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது , இந்த போனில் 8,000mAh பேட்டரி மற்றும் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் ரெட்மி நோட் 17 5ஜி விலை, கிடைக்கும் தன்மை
இந்தியாவில் ரெட்மி நோட் 17 5ஜி-யின் விலை, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 27,999-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், டாப்-ஆஃப்-தி-லைன் 8ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 30,999 ஆகும். எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு நிறுவனம் ரூ. 3,000 உடனடித் தள்ளுபடியை வழங்குகிறது.
இந்த போன் ஆகஸ்ட் 12 அன்று இந்தியாவில் அமேசான் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வர உள்ளது. ரெட்மி நோட் 17 5ஜி, ஆர்டிக் ப்ளூ, டார்க் நைட் மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
Redmi Note 17 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், நோட் 17 5ஜி, 6.9-இன்ச் ஃபுல்-HD+ (1,080 x 2,396 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 100 சதவீத DCI-P3 கலர் கேமட், 1,800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 960Hz PWM DC டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் மற்றும் ஈரமான அல்லது நனைந்த விரல்களால் கூட சிறந்த டச் ரெஸ்பான்ஸை வழங்கும் ஹைட்ரோடச் 2.0 ஆகியவை உள்ளன.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், நோட் 17 5G, 4nm ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் மூலம் பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது. இந்த போனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு மூலம் 2TB வரை அதிகரிக்க முடியும். இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்டண்டிர்க்காக IP65 ரேட்டிங் கொண்டுள்ளது.
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 5ஜி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 அபெர்ச்சர் மற்றும் 2x டிஜிட்டல் ஜூம் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, ஒரு LED ஃபிளாஷுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்படாத ஒரு செகண்டரி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமரா, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டிற்குள் பொருத்தப்பட்டுள்ளது. இது 1080p/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் பவர் கொண்டது.
இதையும் படிங்க:7050mAh பேட்டரி உடன் Vivo புதிய போன் அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க
ரெட்மி நோட் 17 5ஜி, 8,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒரே சார்ஜில் சுமார் 2.5 நாட்கள் பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஒரே சார்ஜில் இந்த போன், யூடியூபில் 28.29 மணிநேர வீடியோ பிளேபேக், வாட்ஸ்அப்பில் 24.14 மணிநேர பயன்பாடு, கூகுள் மேப்ஸ் வழியாக 10.58 மணிநேர ஜிபிஎஸ் நேவிகேஷன் அல்லது BGMI கேம்ப்ளேவில் 13.89 மணிநேர பயன்பாட்டை வழங்கும் என்று அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது. இந்த போன் 169.7×79.14×8.4mm அளவுகளையும், சுமார் 225g எடையையும் கொண்டுள்ளது.