REDMI Note 15 SE 5G
நீங்கள் Redmi போன் பிரியராக இருந்தால் இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் REDMI Note 15 SE 5G இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் அதிரடியாக ரூ,17,999கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,34,999 ஆகும் ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது ஒரே அடியாக ரூ,17,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
REDMI Note 15 SE 5G போன் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் ரூ,17000க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஒரிஜினல் விலை ரூ, 34,999 ஆகும். அதாவது ரூ,17,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
REDMI Note 15 SE 5G போனில் 6.77-இன்ச் (1,080×2,392 பிக்சல்கள்) கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3,200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் DCI-P3 கலர் ரேன்ஜ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இது TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், சர்க்கேடியன் ஃப்ரெண்ட்லி மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்காக IP65 + IP66 டேட்டின்குடன் இந்த போன் வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
இதையும் படிங்க புதிய தோற்றத்தில் Motorola யின் புதிய போன் அறிமுகத்திற்கு ரெடிவேற லுக்கில் கண்ணுக்கு குளு குளுனு இருக்கும்
புதிய ரெட்மி நோட் 15 SE 5G, குவால்காமின் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.4GHz ஹை ப்ரைட்னஸ் கிளாக் ஸ்பேட் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரிக்க முடியும். செக்யூரிட்டிக்காக , இதில் ஸ்க்ரீனுக்கு அடியில் உள்ள பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் வசதிகளும் உள்ளன.
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 15 SE 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1/2.88-அங்குல லைட் ஹண்டர் 400 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா முன்னணியில் உள்ளது. இந்த போனில் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 1/4-இன்ச் சென்சார் கொண்ட 20-மெகாபிக்சல் (f/2.2) கேமரா ரெட்மி நோட் 15 SE 5G-யில் இடம்பெற்றுள்ளது. இது 4K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டுள்ளது .
ரெட்மி நோட் 15 SE 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது கனெக்ஷன் வசதிகளுக்காக 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BDS மற்றும் கலிலியோ ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த ஃபோனின் டைமென்ஷன் 164×75.42×7.35mm மற்றும் இதன் எடை சுமார் 178g ஆகும்.