Redmi Note 10 சீரிஸ் மார்ச் 4 அறிமுகமாகும்.

Redmi Note 10 சீரிஸ் மார்ச் 4 அறிமுகமாகும்.
HIGHLIGHTS

ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது

சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo