Redmi 9 ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் புதிய தகவல்.

HIGHLIGHTS

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Redmi 9 ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் புதிய தகவல்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் வெளியாகி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் ரெட்மி 9 ஸ்மாரட்போனில் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய விவரங்களில் சியோமி நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சிப்செட்களுக்கு மாற்றாக மீடியாடெக் பிராசஸர்களை வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஹீலியோ ஜி70 பிராசஸர் ஹீலியோ ஜி90 பிராசஸரின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. முன்னதாக வெளியான ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்டபோனில் முதல் முறையாக மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டது. இது கேமிங் பிரியர்களுக்கு என உருவாக்கப்பட்ட பிராசஸர் ஆகும்.

மேலும் இதில் 6.7 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருந்தது.இதனால் ரெட்மி அறிமுகம் செய்ய இருக்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

இத்துடன் புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile