Redmi 9 மற்றும் 9 Prime இன்று அசத்தலான ஆபருடன் இன்று விற்பனை.

Redmi 9 மற்றும் 9 Prime இன்று அசத்தலான ஆபருடன் இன்று  விற்பனை.
HIGHLIGHTS

Redmi 9 மற்றும்Redmi 9 Prime ஆகியவை இன்று மதியம் 12 மணி முதல் சேலில் வாங்கலாம்.

இந்த போனை அமேசான் இந்தியா மற்றும் Mi காமில் இருந்து வாங்கலாம்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் கவர்ச்சிகரமான வங்கி கேஷ்பேக் மற்றும் விலை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

ரெட்மியின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Redmi 9 மற்றும்Redmi 9 Prime ஆகியவை இன்று மதியம் 12 மணி முதல் சேலில் வாங்கலாம். பயனர்கள் இந்த போனை அமேசான் இந்தியா மற்றும் Mi காமில் இருந்து வாங்கலாம். இரண்டு போன்களுக்கு பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ப பல சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய விற்பனையில், நீங்கள் சில கவர்ச்சிகரமான சலுகைகளில் ரெட்மி 9 மற்றும் ரெட்மி 9 பிரைம் வாங்கலாம்.

REDMI 9  மற்றும்  REDMI 9  PRIME யின் விலை மற்றும் ஆபர்.

ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. மேட் பிளாக், புதினா பச்சை , ஸ்பேஸ் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஃப்ளேர் வண்ண விருப்பங்களில் வரும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ .9,999.ஆகும்.நாம் ரெட்மி 9 பற்றி பேசினால், அதன் ஆரம்ப விலை ரூ .8,999ஆகும் . இந்த போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆபரேஷன்களில் 4 ஜிபி ரேம் உடன் வருகிறது. ரெட்மி 9 கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்போர்டி ஆரஞ்சு வண்ண வகைகளில் வருகிறது. இன்றைய விற்பனையில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் கவர்ச்சிகரமான வங்கி கேஷ்பேக் மற்றும் விலை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

ரெட்மி 9 பிரைம் சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– ஏஆர்எம் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
– 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5020 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது

REDMI9 சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo