7900mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்த Redmi இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை
Redmi இன்று இந்தியாவில் அதன் புதிய Redmi 17 5G போனை அறிமுகம் செய்தது
இந்த போனில் 7900Mah பேட்டரி உடன் இது 45W டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
அடிப்படை வேரியன்ட் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ, 23,999,
Redmi இன்று இந்தியாவில் அதன் புதிய Redmi 17 5G போனை அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் 7900Mah பேட்டரி உடன் இது 45W டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது மற்றும் இதில் 50MP AI டுயல் கேமரா ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் மற்றும் TÜV Rheinland சர்டிபிகேட் வழங்கப்படுகிறது. விலை மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRedmi 17 5G விலை தகவல்
Redmi 17 5G இந்தியாவில் அதன் அடிப்படை வேரியன்ட் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ, 23,999, அதுவே அதன் ஹை எண்டு மாடல் விலை 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை 26,9999ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் இந்த போனின் விற்பனை செப்டம்பர் 10 அமேசான் மற்றும் Xiaomi அதிகாரபூர்வ வெப்சைட்டில் கிடைக்கும்.
Redmi 17 5G சிறப்பம்சம்.
போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.9-இன்ச் HD+ (720 x 1,600 பிக்ஸல்) ரேசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் மற்றும் TÜV Rheinland சர்டிபிகேட் வழங்கப்படுகிறது.
இந்த போனில் பர்போமன்ஷுக்கு குவால்காமின் 4nm ப்ரோசெசர் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், வழங்கப்படுகிறது. இந்த SoC, 2.4GHz வரையிலான ஹை கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. மேலும், இதில் அட்ரினோ GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதை மைக்ரோ SD கார்டு மூலம் 2TB வரை அதிகரிக்க முடியும். இதனுடன் இந்த போனில் லேட்டஸ்ட் HyperOS 3 கீழ் Android 16 அடிபடையில் இயங்குகிறது
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி 17 5ஜி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமராவும் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த கைப்பேசியில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக f/2.05 துளை கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. இந்த ஃபோனால் 1080p/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும்.
இதையும் படிங்க இன்று முதல் முறையாக விற்பனைக்கு Realme யின் புதிய போன் இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரில் வாங்கலாம் கம்மி விலையில்
Redmi 17 5G பேட்டரி பெக்கபுக்கு 7,900mAh பேட்டரியுடன் இதில் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இதனுடன் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth, NFC, a USB Type-C port, a 3.5mm ஆடியோ ஜாக் போன்றவை வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் செக்யூரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்டன்ட் தாங்கும் திறனுக்காக, இந்த போனில் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது மேலும் இதில் 170.12×78.42×8.8mm மற்றும் இதன் இடை 232g இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
