Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G : 15 ரூபாய்க்குள் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?

Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G : 15 ரூபாய்க்குள் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

ரெட்மி இந்தியா தனது பிரைம் சீரிஸ் முதல் 5ஜி போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது

Redmi 11 Prime 5G ஆனது Poco M4 Pro 5G உடன் போட்டியிடுகிறது

இந்த இரண்டு போன்களில் எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்?

ரெட்மி இந்தியா தனது பிரைம் சீரிஸ் முதல் 5ஜி போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது, Redmi 11 Prime 5G (ரிவியூ). Redmi 11 Prime 5G உடன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. Redmi 11 Prime 5G குறித்து, நாடு முழுவதும் உள்ள 22 வட்டங்களிலும் 5G ஆதரிக்கும் என்று Redmi கூறியுள்ளது. Redmi 11 Prime 5G ஆனது Poco M4 Pro 5G உடன் போட்டியிடுகிறது. Poco M4 Pro 5G (ரிவியூ) ஆரம்ப விலை ரூ.12,999 மற்றும் Redmi 11 Prime 5G இன் ஆரம்ப விலை ரூ.13,999. Poco M4 Pro 5G ஒரு நுழைவு நிலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இந்த இரண்டு போன்களில் எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்?

Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G: சிறப்பம்சம்.

  • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 Poco M4 Pro 5G இல் கிடைக்கிறது. போனில் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz ரிபெரேஸ் ரேட் கொண்டுள்ளது. போனில் MediaTek Dimensity 810 ப்ரோசிஸோர், 8 GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128 GB வரை ஸ்டோரேஜ் உள்ளது. 8GB டைனமிக் ரேமும் போனுடன் கிடைக்கிறது.

  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 Redmi 11 Prime 5G இல் கிடைக்கிறது. இது 6.58 இன்ச் FullHD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரிபெரேஸ் ரேட் கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பும் உள்ளது. 7nm octa-core MediaTek Dimensity 700 ப்ரோசிஸோர் மற்றும் கிராபிக்ஸ் Mali-G57 ஆகியவற்றிற்கான ஆதரவை போன் கொண்டுள்ளது. போன் 6GB ரேம் உடன் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. 

 

ப்ரோசிஸோர் பொறுத்தவரை போகோவின் போன் மற்றும் சாஃப்ட்வேர் அடிப்படையில் ரெட்மியின் போன் போட்டி இடுகிறது.

Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G: கேமரா

  • Redmi 11 Prime 5G இல் இரட்டை பின்புற கேமரா செட்அப் கிடைக்கிறது, இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா f/1.8 ஓப்ச்சர் மற்றும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் f/2.4 ஓப்ச்சர் உடன் கிடைக்கிறது. செல்ஃபிக்காக இந்த போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் உள்ளது.

  • இரட்டை பின்புற கேமரா செட்அப் Poco M4 Pro 5G இல் கிடைக்கிறது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள். போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவில் ரெட்மியை விட போகோவின் போன் முன்னணியில் உள்ளது.

Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G: பேட்டரி மற்றும் கனெக்ட்டிவிட்டி

  • Poco M4 Pro 5G ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33W Pro பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, ஆனால் பாக்ஸ்யில் 22.5W சார்ஜர் மட்டுமே கிடைக்கும். சைடுமௌன்டெட் பொருத்தப்பட்ட பிங்கர் சென்சார் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டிக்கு, 5G, 4G LTE, Wi-Fi, USB OTG, USB Type-C port, Bluetooth v5 மற்றும் 3.5mm headphone jack போன்ற பியூச்சர்கள் உள்ளன.

  • Redmi 11 Prime 5g ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இருப்பினும் 22.5W சார்ஜர் பாக்ஸ்யில் கிடைக்கும். போன் கனெக்ட்டிவிட்டிற்காக, 5G, 4G LTE, Wi-Fi, USB OTG, USB Type-C port, Bluetooth v5 மற்றும் 3.5mm headphone jack போன்ற பியூச்சர்கள் உள்ளன. 

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அடிப்படையில், இரண்டு போன்களும் கிட்டத்தட்ட சமம்.

Redmi 11 Prime 5g vs Poco M4 Pro 5G: விலை

  • Poco M4 Pro 5G ஐ கூல் ப்ளூ, போகோ மஞ்சள் மற்றும் பவர் பிளாக் நிறங்களில் வாங்கலாம். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ.12,999. அதே நேரத்தில், 6 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.14,999 ஆகவும், 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 ஆகவும் உள்ளது.

  • Redmi 11 Prime 5G ஆனது Mido Green, Chrome சில்வர் மற்றும் தண்டர் பிளாக் நிறம் விருப்பங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் 4ஜிபி ரேம் கொண்ட 64ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.13,999 மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 6ஜிபி ரேம் விலை ரூ.15,999. 

Poco M4 Pro 5G விலையிலும் முன்னணியில் உள்ளது.

எனவே ஒட்டுமொத்தமாக, Poco M4 Pro 5G வாங்குவது உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo