50MP குவாட் கேமராவுடன் Xiaomi Redmi 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 179 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13,300 என துவங்குகிறது

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது..

50MP குவாட் கேமராவுடன் Xiaomi Redmi 10 ஸ்மார்ட்போன்  அறிமுகம்.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி 10 மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் அடாப்டிவ்சின்க் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 Xiaomi Redmi 10 விலை தகவல்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 179 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13,300 என துவங்குகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,785 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 219 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,270 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 
ரெட்மி 10 அம்சங்கள்

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்
– ARM மாலி-G52 2EEMC2 GPU
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– டூயல் சிம் ஸ்லாட் 
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
– 50 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப் சி 
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். கொண்டிருக்கும் ரெட்மி 10 மாடல் மேட் கார்பன் கிரே மற்றும் பெபிள் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile