Realme அடுத்து 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும்.

Realme அடுத்து 5G  ஸ்மார்ட்போனை  விரைவில் அறிமுகம் செய்யும்.
HIGHLIGHTS

புதிய அறிவிப்பின் மூலம் ரியல்மி பிராண்டு ஹூவாய், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Realme ப்ராண்ட் இந்தியாவில் ஒப்போவின்  சப் ப்ரண்டாக  மே 2018-யில் அறிவிய்க்கப்பட்டது இதனுடன் வந்த சில நொடியில் மிகப்பெரிய பெயரை பெற்றுள்ளது, அதனை தொடந்து சமீபத்தில் பல நிறுவனங்களும் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து கொண்டிருக்கும் பாப்-கேமரா கொண்ட Realme நிறுவனம் அதன் Realme X ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி தனக்கென குறிப்பிடத்தக்க பிராண்டு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ரியல்மி பிராண்டு மிட்-ரேன்ஜ் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் தயாராகிவிட்டது.

முன்னதாக ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

புதிய அறிவிப்பின் மூலம் ரியல்மி பிராண்டு ஹூவாய், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி தவிர மோட்டோரோலா, எல்.ஜி. மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் பட்சத்தில் 2020 ஆம் ஆண்டில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் ரியல்மி பிராண்டு பிரீமியம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo