Realme யின் 5G ஸ்மார்ட்போன் Narzo 50 மற்றும் Narzo 50 Pro இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

Realme Narzo 50 Pro 5G மற்றும் Realme Narzo 50 5G ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு கைபேசிகளும் MediaTek Dimension செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி 6GB+128GB மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB+128GB மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Realme Narzo 50 Pro 5G மற்றும் Realme Narzo 50 5G ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Realme பிராண்டின் புதிய Narzo ஸ்மார்ட்போன்கள் இளைய தலைமுறையினரை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்படுகின்றன, முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இரண்டு கைபேசிகளும் MediaTek Dimension செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.

Realme Narzo 50 Pro 5G மற்றும் Realme Narzo 50 5G சிறப்பம்சம். விலை விவரங்கள்:

இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி 6GB+128GB மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB+128GB மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நார்சோ 50 5ஜி 4GB+64GB மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 4GB+128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
 
Realme Narzo 50 5G சிறப்பம்சம்.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர், 4GB+ 64GB, 4GB+ 128GB மெமரி மற்றும் 6GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, பிளாக் அண்ட் வைட் போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

ரியல்மி  நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி பிராசஸர், 6GB+ 128GB மெமரி மற்றும் 8GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 4CM மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :