REALME NARZO 20, நார்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 புரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இந்த போனில் நிறுவனத்தின் நார்ஜோ சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது மே மாதத்தில் நர்சோ 10 மற்றும் நார்சோ 10 ஏ உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் Realme Narzo 20A இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் realme.com யில் விற்பனைக்கு வருகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
REALME NARZO 20 A விலை மற்றும் ஆபர் தகவல்
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.மற்றும்
முதல் சேலில் , தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகையுடன் இந்த போனையும் வாங்கலாம். ICICI வங்கியின் கிரெடிட் கார்டுடன் இந்த போனை ஈஎம்ஐயில் வாங்கி கொள்பவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டையில் 5 சதவீத கேஷ்பேக்கையும் நிறுவனம் வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு ரூ .945 முதல் தொடங்கி கவர்ச்சிகரமான விலை இல்லாத ஈ.எம்.ஐ யிலும் இந்த போனை வாங்கலாம்.
இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் லென்ஸ், 2 எம்பி ரெட்ரோ லென்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வங்கப்பட்டு உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile