ரியல்மி நிறுவனம் GT Neo2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் போன்ற அம்சங்கள் உள்ளன.
ரியல்மி GT Neo3 விலை தகவல்.
ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் நைட்ரோ புளூ, ஸ்டிரைப் வைட் மற்றும் ஆல்ஃபாஸ்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 80W 8GB + 128GB மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 ஆகும். இதன் 12GB + 256GB 150W மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை மே 4 ஆம் தேதி துவங்குகிறது.
– 6.7 இன்ச் 2412×1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
– மாலி-G510 MC6 GPU
– 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
– 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
– 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
– 2MP மேக்ரோ கேமரா, f/2.4
– 16MP செல்ஃபி கேமரா, f/2.45
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.3
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
– 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் பாஸ்ட் சார்ஜிங்
இதில் உள்ள லிக்விட் கூல்டு மேக்ஸ் ஸ்மார்ட்போனை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மற்றும் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. 5 நிமிடங்களில் 50 சதவீதமும், 15 நிமிடங்களுக்குள் 100 சதவீதமும் சார்ஜ் ஏற்றும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.