Realme GT மற்றும் Realme GT Master Edition அறிமுகம் இதன் சிறப்பம்சங்களை தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது

ரியல்மி ஜிடி சீரிஸ் விலை ரூ. 25,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

Realme GT மற்றும் Realme GT Master Edition அறிமுகம் இதன் சிறப்பம்சங்களை தெரிஞ்சிக்கோங்க.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஜிடி சீரிஸ் விலை ரூ. 25,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் சிறப்பம்சம் 
 
அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஜிடி மாடலில் 16 எம்பி செல்பி கேமரா, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.

ரியல்மி ஜிடி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, வைபை, ப்ளூடூத் அம்சங்கள் உள்ளன. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி ஜிடி மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile