சத்தமில்லாமல் Realme புதிய போன் இந்தியாவில் அறிமுகம் விலை அம்சங்கள் பார்த்து தெருஞ்சிகொங்க
Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது,
Realme C85 5G போனில் 6.8-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
Realme C85 5G ஸ்மார்ட்போன் 4GB + 128GB வகையின் விலை ₹15,499 ஆகும்
Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது,, மேலும் இந்த போனை மிக சிறந்த பட்ஜெட்டில் இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மற்றும் 7000mAh பேட்டரி உடன் இருக்கிறது, மேலும் இந்த போனில் மிக சிறந்த அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme C85 5G சிறப்பம்சம்.
Realme C85 5G போனில் 6.8-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Realme UI 6.0 (Android 15) இயக்குகிறது. இதை தவிர இந்த போனில் 5300+ mm² VC கூலிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது, இது நீண்ட காலத்திற்கு ஸ்டேண்டர்ட் பர்போமான்ஸ் பராமரிக்க உதவுகிறது. ரேம் 10GB வரை அதிகரிக்க , மேலும் ஸ்டோரேஜ் microSD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும் .
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Realme C85 5G பின்புறத்தில் 50MP Sony IMX852 ப்ரைமரி சென்சார் கொண்டுள்ளது, இது AI எடிட்டிங் அம்சங்களுடன் வருகிறது. முன்பக்கத்தில், 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுக்கு 8MP கேமரா உள்ளது.

இந்த போனில் 1115 அல்ட்ரா-லீனியர் பாட்டம் ஸ்பீக்கர் உள்ளது, இது 400% அல்ட்ரா வால்யூம் அவுட்புட் வழங்கும் பவர் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. பேட்டரி பவருக்கு 7000mAh பேட்டரி ஆகும், இது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க MOTOROLA என்றாலே தனி மவுசு தான் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,3000 டிஸ்கவுண்ட் Black friday Sale இன்று கடைசி
மேலும் கனெக்ஷன் விருப்பங்களில் 5G SA/NSA, Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, GPS மற்றும் USB டைப்-C ஆகியவை அடங்கும்.Realme C85 5G போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் போன்ற சப்போர்ட் வழங்கப்படுகிறது
Realme C85 5Gவிலை தகவல்
Realme C85 5G ஸ்மார்ட்போன் 4GB + 128GB வகையின் விலை ₹15,499 ஆகும், அதே நேரத்தில் 6GB + 128GB வகையின் விலை ₹16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Parrot Purple மற்றும் Peacock Green வண்ண விருப்பங்களில் Realme India ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மற்றும் Flipkart வழியாக கிடைக்கிறது.
இதை தவிர இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை 14,999ரூபாய்க்கும் மற்றும் 16,499க்கும் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile