மார்ச் 5 அறிமுகமாகும் அடுத்து அசத்தலான Realme யின் ஸ்மார்ட்போன்,

மார்ச் 5 அறிமுகமாகும் அடுத்து அசத்தலான Realme யின் ஸ்மார்ட்போன்,

ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியல்மி 6 சீரிஸ் டீசர்

தற்சமயம் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 15-ம் தேதி துவங்குகிறது

ரியல்மி 6 சீரிஸ் டீசர்

புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஒற்றை பன்ச் ஹோல், ரியல்மி 6 ப்ரோ மாடலில் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஒற்றை செல்ஃபி கேமராவுடன், கூடுதலாக வைடு ஆங்கில் லென்ஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ரியல்மி 6 ப்ரோ மாடலில் 90 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்.பி. ஏ.ஐ. குவாட் கேமராக்கள், ரியல்மி 6 ப்ரோ மாடலில் அல்ட்ரா வைடு லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile