நோட்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமானது Realme 2 ஸ்மார்ட்போன்..!

Updated on 28-Aug-2018
HIGHLIGHTS

Realme 2 ஸ்மார்ட்போன் 8,990 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது, இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 450 கொடுக்கப்பட்டுள்ளது

ஒப்போவின் சப் பிரான்ட் ஆன ரியல்மி புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு வந்த . இந்நிலையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD  பிளஸ் ஸ்கிரீன் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் டிசைன் கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
– 4230 Mah  பேட்டரி

இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் டைமன்ட் புளு வெர்ஷன் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அறிமுக சலுகைகள்:

– ரியல்மி 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.750 தள்ளுபடி பெற முடியும்.
– ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4200 மதிப்புடைய உடனடி சலுகைகள் மற்றும் 120 ஜிபி கூடுதல் டேட்டா 
– வட்டியில்லா மாத தவணை முறை வசதி
– பேடிஎம் விமான பயணச்சீட்டுகள் மற்றும் லென்ஸ்கார்ட் சார்பில் பிரத்யேக சலுகைகள்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :