200MP கேமரா கொண்ட Realme 16 pro இன்று முதல் முறையாக விறபனைக்கு வருகிறது

Updated on 09-Jan-2026

Realme சமிபத்தில் அதன் Realme 16 Pro போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது , அதனை தொடர்ந்து இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக முறையாக இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது, அதாவது தற்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,28,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் மிக சிறந்த பேங்க் ஆபர் மற்றும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Realme 16 Pro டிஸ்கவுண்ட் நன்மை.

Realme 16 Pro யின் இந்த போன் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போன் அடிப்படை வேரியன்ட் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ,31,999. டிஸ்கவுண்ட் பிறகு, இதை ரூ,28,999க்கு வாங்கலாம். 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,33,999. தள்ளுபடிக்குப் பிறகு, அதன் விலை ரூ,30,999 ஆகக் குறைகிறது. 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ₹36,999. தள்ளுபடிக்குப் பிறகு, இதை ரூ,33,999க்கு வாங்கலாம்.

Realme 16 Pro discount

அதாவது இந்த போன்களில் ரூ,3,000 பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது எனவே இந்த போனை அறிமுக சலுகயாக இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.

இதையும் படிங்க: 200MP பவர்பு கேமரா உடன் OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Proஅறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Realme 16 Pro சிறப்பம்சம்.

Realme 16 Pro போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதன் (1272 X 2772) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 6500nit வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது. மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Max 5G octa-core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இது realme UI 7.0 மற்றும் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது

இப்பொழுது Realme 16 Pro கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் டுயல் கேமரா செட்டப் வழங்குகிறது அதில் 200MP மெயின் போர்ட்ரைட் கேமரா மற்றும் இதில் 8MP வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த கேமராவில் AI அம்சங்கள் கொண்டுள்ளது.

இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 7000mAh பேட்டரி உடன் 80W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு GSM,LTE FDD Band,ப்ளுடூத் மேலும் இது மாஸ்டர் கோல்ட் 162.60×77.60×7.79 mm) மற்றும் Pebble Grey Orchid Purple (162.60×77.60×7.75 mm) திக்னஸ் மற்றும் இதன் இடையோ 192g இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :