தினுசு தினுசா யோசிக்கும் Realme, முதல் முறையாக செல்ஃபி மிரர் கேமரா ஃபோன் மார்கெட்டில் என்ட்ரிக்கு ரெடி
ரியல்மி நிறுவனம் புதிய Realme 16 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது
இந்த போன் நிறுவனத்தின் 16 வது சீரிஸ் ஆகும்
இந்த போனை இந்தியாவில் மிரர் போன் என்று கூறுவார்
Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Realme 16 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, இந்த போன் நிறுவனத்தின் 16 வது சீரிஸ் ஆகும், மேலும் இந்த போனை இந்தியாவில் மிரர் போன் என்று கூறுவார். மேலும் realme நிறுவனம் கடந்த வாரமே அதன் P4 சீரிஸ் அறிமுகம் செய்த நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய போனை களத்தில் இறக்க தயார் செய்து வருகிறது, மேலும் இந்த போனின் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme 16 5G அறிமுக தகவல் மற்றும் டிசைன்
தற்பொழுது இந்த போனின் அறிமுக தேதி ஏதும் குறிப்பிடவில்லை தற்பொழுது இது Coming sonn என்பதை Realme யின் X பக்கத்தில் பார்க்கலாம்.
A design that feels light, built to go further.
— realme (@realmeIndia) March 24, 2026
Gleaming Wings that catches every glance. #realme16 5G launching soon#SpreadYourWings
Know more: https://t.co/HowgqnkNQLhttps://t.co/xYvczBuub2 pic.twitter.com/drhsYGZBGA
Realme 16 5G போன் Pro மாடலுடன் இது சற்று வித்தியாசமாக இருக்கிறது, அதாவது இந்த போனில் ஹோரிசாண்டல் கேமரா வழங்கப்படுகிறது, அதாவது இந்த போன் Google Pixel மற்றும் iPhone Air போன்ற ஸ்டைலிஷ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Elegant Air Design வழங்கப்படுகிறது , மேலும் இந்த போனின் கேமராவில் செல்பி மிரர் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபோனின் பின்புறத்தில் ஒரு சிறிய வட்டக் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதால், இது ‘செல்ஃபி மிரர் ஃபோன்’ என்று அழைக்கப்படுகிறது பின்புறக் கேமராவைக் கொண்டு செல்ஃபி எடுக்கும்போது, அந்தக் மிரர் ஒரு வியூஃபைண்டராகச் செயல்படும்.
Realme 16 5G மற்ற நம்சங்கள்
Realme 16 5G போனில் 6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது, இதை தவிர இந்த போனில் முதல் முறையாக DTStar D+ கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6400 Turbo சிப்செட் வழங்கப்படுகிறது
Realme 16 5G போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP Sony IMX852 மற்றும் 2MP மோனோக்ரோம் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் இருக்கும் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் 50MP மிரர் செல்ஃபி கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரி உடன் இது 60W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 6050mm² வேப்பர் சேம்பர் சப்போர்ட் இருப்பதால் இந்த போன் அதிக சூடவதிளிருந்து தடுக்கும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile