Poco X3 GT ஸ்மார்ட்போன் Dimensity 1100 ப்ரோசெசர் சப்போர்டுடன் அறிமுகம்.

Poco X3 GT ஸ்மார்ட்போன் Dimensity 1100 ப்ரோசெசர் சப்போர்டுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

Poco X3 ஜிடியை மலேசியா மற்றும் வியட்நாமில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Poco X3 GT மூன்று வண்ணங்களிலும் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளிலும் கிடைக்கும்

Poco X3 GT மீடியாடெக்கின் ஆக்டா கோர் செயலி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது

போகோ தனது புதிய ஸ்மார்ட்போன்  Poco X3 ஜிடியை மலேசியா மற்றும் வியட்நாமில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட போகோ எக்ஸ் 3 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.  Poco X3 GT மூன்று வண்ணங்களிலும் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளிலும் கிடைக்கும். இது தவிர,  Poco X3 GT யில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவின் ஸ்டைல் ஒரு பஞ்ச்ஹோல் ஆகும், இதில் முன் கேமரா வழங்கப்படுகிறது.Poco X3 GT மீடியாடெக்கின் ஆக்டா கோர் செயலி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 10 புரோ 5 ஜியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று கூறப்படுகிறது.

Poco X3 GT யின் விலை 

Poco X3 GT 1,299 மலேசிய ரிங்கிட்டின் ஆரம்ப விலை அதாவது ரூ .22,800. இந்த விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் . அதே நேரத்தில், 8 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 1,599 மலேசிய ரிங்கிட் அதாவது சுமார் ரூ .28,000. போனை கிளவுட் ஒயிட், ஸ்டார்கேஸ் பிளாக் மற்றும் வெப் ப்ளூ வண்ணத்தில் வாங்கலாம். இந்த போன் தள்ளுபடி ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மலேசியாவில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் இந்த போன் வருவது குறித்து தற்போது எந்த செய்தியும் இல்லை.

Poco X3 GT யின்  சிறப்பம்சம் 

Poco X3 GT யில் 6.6 1080×2400 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே. டிஸ்பிளேவின் அப்டேட் வீதம் 120 ஹெர்ட்ஸ் ஆகும். இது கொரில்லா கிளாஸ் விக்டஸின் ஆதரவைக் கொண்டுள்ளது. போனில் மீடியாடெக் டிமான்சிட்டி 1100 ப்ரோசெசர் மற்றும் கிராபிக்ஸ் மாலி-ஜி 77 ஜிபியு உள்ளது. போனில் 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது.

Poco X3 GT யின் கேமரா 

கேமராவைப் பற்றி பேசுகையில், இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை லென்ஸ் 64 மெகாபிக்சல்கள் மற்றும் அதன் அப்ரட்ஜர் f / 1.79 ஆகும். போனில் எஃப்/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகும், இது எஃப் / 2.4 அப்ரட்ஜர் கொண்டது. போக்கோ எக்ஸ் 3 ஜிடி 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

Poco X3 GT யின் பேட்டரி 

Poco X3 GT யில் 5G, Wi-Fi 6, ப்ளூடூத்  v5.2, GPS மற்றும்  USB டைப் சி போர்ட் இருக்கிறது  போனில் ஒரு பக்க பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி 67W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. போனின் எடை 193 கிராம் மற்றும் டால்பி அம்டோஸ் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo